Thursday, May 7, 2009

பெரியாரின் பேரன் யாராய் இருந்தால் என்ன?

இது என்னட புது கதையாக உள்ளது என்று உங்களுக்கு தோன்றலாம்.ஆனால் இந்த பேரன் விவகாரம் பெரும் பூகம்பத்தை கிளப்பியுள்ளது.
 
பெரியாருடைய உண்மையான பேரன் நான் தான் என்று ஈவிகேஎஸ் இலங்கோவன் உரிமை கொண்டாடும் அளவுக்கு இப்போ என்ன நடந்தது?
 
அவரை பெரியாரின் பேரன் இல்லை என்று யார் சொன்னது.அவருக்கு ஏன் இப்படி ரோசம் பொத்துக்கொண்டு வரவேண்டும்.
 
தமிழ்நாட்டில் உள்ள ஒவ்வொருவருக்கு பொதுவானவரே தந்தை பெரியார்.அவரை தனிப்பட்ட முறையில் சொந்தம் கொண்டாடி அவருடைய பெயருக்கு களங்கம் கற்பிக்கும் வேலையில் இறங்கிவிட்டார் இந்த காங்கிரஸ்காரர்.
 
காங்கிரஸ் கட்சியின் சமீபக்கால நகர்வுகள் தமிழ் நாட்டில் ஒரு விதமான சலசலப்பை ஏற்படுத்தியிருக்கும் போது இதுதன்னை திராவிட பிண்ணனியில் இருந்து வந்தவன் என்று காட்டி ஓட்டு பொறுக்கும் வேலையை கச்சிதமாக செய்ய முயற்சி செய்கிறாரோ என்று சந்தேகப்பட வைக்கிறது.
 
அப்படி ஏமாற தமிழக மக்கள் என்ன காதில் மல்லிகை பூவா வைத்துள்ளார்கள்??
 
 

ஆபாசமாக படு கேவலமாக பேசிய அருமை பேரன்

மகாத்மா காந்தியை தேசத்தந்தை என்றும் காந்திதாத்தா என்றும் அன்போடு அழைப்பது வழமை.ஆனால் இதை கொச்சை படுத்த வேறு வகையில் எந்த ஈன புத்தி மனிதர்களும் நினைக்க மாட்டார்கள்.
 
அது போலவே தந்தை பெரியாரை எல்லோரும் தந்தை என்று அழைப்பது வழக்கம்.இயக்குனர் சீமான் ஒரு படி மேலே அவர் மேல் அன்பு கொண்டு அவரை தனது தாத்தா என்றும் அவரது கொள்கைகளை தான் பின்பற்றுவதால் அவருடைய உண்மையா பேரன் என்ப்றும் பேசியுள்ளார்.
 
இதை கூட புரிந்துகொள்ளாத ஈனத்தனமான புத்தியுடன் இதை விமர்ச்சித்துள்ள ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் என்ற தமிழ்நாடு காங்கிரஸின் மூத்த தலைவரை எதைக்கொண்டு அடிக்க என்பதை வாசகர்களாகிய உங்கள் முடிவுக்கே விடுகிறேன்.
 
ஒரு புறம்போக்குதனமான விமர்ச்சனத்த நான் வன்மையாக கண்டிக்கிறேன்.
 
இலங்கோவன் அப்படி என்ன விமர்சித்தார் என்று கேட்கிறீர்களா?
 
இங்கு சென்று வாசியுங்கள்=http://www.nakkheeran.in/users/frmNews.aspx?N=8014

Sunday, May 3, 2009

கடைசி செய்தி:மீதம் உள்ள நிலப்பரப்பில் முச்சு திணரும் குண்டுகளை வீச இலங்கை ராணுவம் தாயாராக்கிக் கொண்டிருக்கிறது.

கடைசி செய்தி:மீதம் உள்ள நிலப்பரப்பில் முச்சு திணரும் குண்டுகளை வீச இலங்கை ராணுவம் தாயாராக்கிக் கொண்டிருக்கிறது.


உலகினால் தடைசெய்யப்பட்ட இவ்வகையான குண்டுகளை வீச 200 சிறப்பு வகையான முகமூடிகள்,மற்றும் உடைகள் கிளிநொச்சிக்கு வரவழைக்கப்பட்டுள்ளதாக அங்கிருந்து தெரிவிக்கப்படுகிறது.


இந்த குண்டுகள் 30 நிமிடங்களுக்குள் முச்சு திணறல் ஏற்படுத்த வல்லது.மேலும் குழந்தைகள்,முதியோர் அனைவரையும் கொன்றுவிட கூடியது இவ்வகையான குண்டுகள்.


உறவுகளே பாரிய அழுத்தம் கொடுத்து இவ்வபாயத்தில் இருந்து மக்களை காப்பாற்ற உதவுங்கள்


செய்தி மூலம்:அதிர்வு

Saturday, May 2, 2009

ராணுவ வாகனங்களில் இருந்த ராக்கெட் லாஞ்சர்கள் உண்மையானவைகள் அல்ல-தினமலர்

 


இன்றைக்கு தினமலர் இணையம் திறந்து அதன் திருவாய் மலர்ந்து அருளும் செய்திகளை பார்வையிட்ட போது எப்பொழுதும் உண்மையை மட்டுமே பேசும்!! தினமலர் இந்த ராணுவ வாகனங்களின் ஆயுதங்களை பற்றி என்ன சொல்லியுளது தெரியுமா?

அந்த ராணுவ வாகனங்களில் இருந்தது டம்மி ராக்கெட் லாஞ்சர்களாம்.இது பயிற்சிக்காக கொண்டு செல்லப்பட்டதாம்.வாகனம் முழுவதும் ஆயுதங்கள் நிறம்பியிருந்ததாக பெதிக சொல்லுகிறார்கள்.அவர்கள் செய்தது அராஜகம் என்று சொல்லுகிறது தினமலர்.


தமிழ்மக்களை சொல்லி கொல்லுகிறான் சிங்களவன்.ஆனால் சொல்லாமல் கொல்லுகிறார்கள் காங்கிரசும் அதன் தோழமை கட்சிகளும்,தினமலர் போன்ற பத்திரிக்கைகளும்


 

இது கூட தினமலரின் சாதனை பட்டியலில் இடம் பெறலாம்

தினமலர் இணையதளம் தான் முதலிடம் பிடித்துள்ளது என்று விளம்பரப்படுத்தியதை பொருக்க முடியாமல் அண்ணன் மரைக்காயர் ஒரு பதிவெழுதினார்.
 
அவர் எழுதிய பதிவு மிக அதிக வாசகர்களை கவர்ந்தது.என்னயும் இரண்டு பதிவுகள் போட தூண்டியுள்ளது என்றால் பார்த்துக்கொள்ளுங்களேன்.
 
"தமிழ்மண வாசகர் அனைவராலும் கவர்ந்திழுக்கப்பட்ட தினமலர் "
 
என்று நாளை தினமலரில் ஒரு மிக நீண்ட அட்டவணை வந்தாலும் வரலாம்.இது தினமலருடைய சாகசங்களை உயர்த்த பயன்படலாம்.
 
யாருக்கு தெரியும் என்னுடைய இந்த இரண்டு பதிவுகளுக்கு கூட அதிக வாசக கூட்டம் வந்தாலும் வரலாம்.

தினமலர் இணையதளம் இவ்வளவு பிரபலம் ஆனதற்கு என்ன காரணம்

கடந்த இரண்டு நாளைக்க்கு முன்பு தினமலர் இணையதளம் தங்களுடைய இணைய தளமே அதிகமானோரால் பார்வையிடப்படுகிறது என்ற கணக்கை வெளியிட்டு இருந்தது.இது எதனால் என்று என்னைக்கேட்டுக்கொண்ட போது எனக்கு உதித்த காரணங்களை பட்டியலிட்டு உள்ளேன்.
 
வேறு காரணங்கள் உங்களுக்கு தெரிந்தால் சொல்லவும்
 
 
 
எங்கள் பள்ளியில் இரண்டு விதமான குழுக்கள் உண்டு.ஒன்று நன்றாக படிக்கும் மாணவர்கள் உள்ள குழு.இதில் ஒரு சில  மாணவர்கள் இந்த குழுவுடனிணைந்து கொள்ளுவார்கள்.
 
இன்னொன்று மிகவும் மோசமான கேடுகெட்ட குழு.இதை எல்லோரும் அறிந்திருப்பார்கள்.மிகவும் கேடித்தனம் செய்து,பொய் சொல்லி சுற்றும் புரட்டு கூட்டம்.
 
பெரும்பாலான மாணவ கூட்டம் தெரிந்தோ தெரியாமலோ இந்த கேவலக் கூட்டத்தின் பிண்ணனியில் இருப்பதை அதிகமாக விரும்புவார்கள்.
 
காரணம் ஒன்று பயம்,அடுத்து விளம்பரம்,அடுத்து தெளிவடைய இது மூன்று காரணங்கள் அடிப்படையில் இரண்டாவது குழுவை பின்பற்றும் கூட்டம் கொஞ்சம் அதிகமே.
 
 
 
இது போலவே தினமலர் பத்திரிக்கையை விட நல்ல அருமையான உண்மையை உடனே உலகுக்கு கூறும்  இணையதளங்கள் இருக்கும் போதும் தினமலர் இணையதளம் அதிகமானோரால் பார்க்கப்படுவதற்கான காரணம் ஒரு சில உண்டு.
 
 
1) ஒன்று தங்கள் ஊரில் செத்துப்போனவர்களின் விளம்பரங்களை கண்டு விவரம் அறிந்துகொள்ள.
 
2)ஒருவர் முஸ்லீமாக இருந்தால் அவர் தினமலர் இணையத்தில் பார்வையிடுவது இஸ்லாமுக்கு எதிராக என்ன எழுதப்படுகிறது என்பதே.
 
3)கிறிஸ்தவராக இருந்தால் தினமலர் தங்கள் மதத்துக்kஉ எதிராக எப்படி எல்லாம் செயல்படுகிறது என்பதற்காக.
 
4)தமிழனாக இருந்தால் தமிழினத்துக்கு எதிராக தினமலர் எப்படி எல்லாம் செயல் பட்டு வருகிறது என்பதைஅறிந்துகொள்ள
 
5)நாஸ்திகராக இருந்தால் தினமலரின் ஆன்மீகம் என்ற பெயரில் வீசும் அண்ட புழுகுகளை அறிந்து கொள்ள.
 
6)தலித்துகளாக இருந்தால் தினமலரின் பார்பன புத்தி எப்படி எல்லாம் வேலை செய்கிறது என்று அறிய.
 
 
இப்படி பற்பல காரணங்களை கழித்து தினமலர் இணையத்தின் உண்மையான பயன்பாட்டாளர்கள் எத்தனை என்று கணக்கிட்டால் கொஞ்சம்ம் வருந்தத்தக்க சதவீதமே இருக்கும் என்பது என் கணிப்பு