Saturday, May 2, 2009

தினமலர் இணையதளம் இவ்வளவு பிரபலம் ஆனதற்கு என்ன காரணம்

கடந்த இரண்டு நாளைக்க்கு முன்பு தினமலர் இணையதளம் தங்களுடைய இணைய தளமே அதிகமானோரால் பார்வையிடப்படுகிறது என்ற கணக்கை வெளியிட்டு இருந்தது.இது எதனால் என்று என்னைக்கேட்டுக்கொண்ட போது எனக்கு உதித்த காரணங்களை பட்டியலிட்டு உள்ளேன்.
 
வேறு காரணங்கள் உங்களுக்கு தெரிந்தால் சொல்லவும்
 
 
 
எங்கள் பள்ளியில் இரண்டு விதமான குழுக்கள் உண்டு.ஒன்று நன்றாக படிக்கும் மாணவர்கள் உள்ள குழு.இதில் ஒரு சில  மாணவர்கள் இந்த குழுவுடனிணைந்து கொள்ளுவார்கள்.
 
இன்னொன்று மிகவும் மோசமான கேடுகெட்ட குழு.இதை எல்லோரும் அறிந்திருப்பார்கள்.மிகவும் கேடித்தனம் செய்து,பொய் சொல்லி சுற்றும் புரட்டு கூட்டம்.
 
பெரும்பாலான மாணவ கூட்டம் தெரிந்தோ தெரியாமலோ இந்த கேவலக் கூட்டத்தின் பிண்ணனியில் இருப்பதை அதிகமாக விரும்புவார்கள்.
 
காரணம் ஒன்று பயம்,அடுத்து விளம்பரம்,அடுத்து தெளிவடைய இது மூன்று காரணங்கள் அடிப்படையில் இரண்டாவது குழுவை பின்பற்றும் கூட்டம் கொஞ்சம் அதிகமே.
 
 
 
இது போலவே தினமலர் பத்திரிக்கையை விட நல்ல அருமையான உண்மையை உடனே உலகுக்கு கூறும்  இணையதளங்கள் இருக்கும் போதும் தினமலர் இணையதளம் அதிகமானோரால் பார்க்கப்படுவதற்கான காரணம் ஒரு சில உண்டு.
 
 
1) ஒன்று தங்கள் ஊரில் செத்துப்போனவர்களின் விளம்பரங்களை கண்டு விவரம் அறிந்துகொள்ள.
 
2)ஒருவர் முஸ்லீமாக இருந்தால் அவர் தினமலர் இணையத்தில் பார்வையிடுவது இஸ்லாமுக்கு எதிராக என்ன எழுதப்படுகிறது என்பதே.
 
3)கிறிஸ்தவராக இருந்தால் தினமலர் தங்கள் மதத்துக்kஉ எதிராக எப்படி எல்லாம் செயல்படுகிறது என்பதற்காக.
 
4)தமிழனாக இருந்தால் தமிழினத்துக்கு எதிராக தினமலர் எப்படி எல்லாம் செயல் பட்டு வருகிறது என்பதைஅறிந்துகொள்ள
 
5)நாஸ்திகராக இருந்தால் தினமலரின் ஆன்மீகம் என்ற பெயரில் வீசும் அண்ட புழுகுகளை அறிந்து கொள்ள.
 
6)தலித்துகளாக இருந்தால் தினமலரின் பார்பன புத்தி எப்படி எல்லாம் வேலை செய்கிறது என்று அறிய.
 
 
இப்படி பற்பல காரணங்களை கழித்து தினமலர் இணையத்தின் உண்மையான பயன்பாட்டாளர்கள் எத்தனை என்று கணக்கிட்டால் கொஞ்சம்ம் வருந்தத்தக்க சதவீதமே இருக்கும் என்பது என் கணிப்பு
 
 

6 comments:

Sketch Sahul said...

"ஒருவர் முஸ்லீமாக இருந்தால் அவர் தினமலர் இணையத்தில் பார்வையிடுவது இஸ்லாமுக்கு எதிராக என்ன எழுதப்படுகிறது என்பதே."

correct

முனைவர் இரா.குணசீலன் said...

ரொம்ப நல்லா சொன்னீங்க

நிறையபேர் பார்க்கிறார்கள் என்பதாலே அது தரமான இணையதளம் என்ற கூறிவிமுடியாது......

நான்கூட தின மலர் பார்ப்பேன்

எவ்வளவு தமிழுக்குத் தீங்கிழைக்கிறார்கள்?
மூடநம்பிக்கைக் கருத்துக்களை எந்த அளவுக்கு புகுத்துகிறார்கள்?
மதம், சாதி ஆகியவற்றை தக்கவைத்துக்கொள்ள எந்த அளவு முயற்சிசெய்கிறார்கள் என்பதை அறிந்து கொள்ள....
இன்னும் இது போன்ற காரணங்களுக்காக............

தீப்பெட்டி said...

நீங்க சொல்லுறதுல உண்மை இருக்கு

வெத்து வேட்டு said...

//raja said... correct//

ரொம்ப நன்றிங்க

வெத்து வேட்டு said...

//முனைவர்.இரா.குணசீலன் said... நான்கூட தின மலர் பார்ப்பேன்//

நானும் தானுங்க ஐயா

வெத்து வேட்டு said...

//தீப்பெட்டி said...
நீங்க சொல்லுறதுல உண்மை இருக்கு
//

நன்றிங்க,

Post a Comment