தென் ஆப்பிரிக்காவில் நடந்து வரும் 2வது சீசன் ஐபிஎல் தொடரின் சூப்பர் ஹீரோவாக உருவெடுத்துள்ளார் கம்ரான் கான்.
ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் வீரரான கம்ரான் கான், தனது மாயாஜால பந்து வீச்சு மூலம் எதிரணிகளை புரட்டிப் போட்டுக் கொண்டிருக்கிறார்.
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் ராஜஸ்தானுக்கு வெற்றி தேடி தந்த இவருக்கு விரைவில் இந்திய அணியில் இடம்பெறும் தகுத வேகமாக கூடி வருகிரது.
ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டன் ஷான் வார்னிடம் ஒரு புதுமை உள்ளது. கடந்த ஆண்டு நடந்த முதல் தொடரில் இந்திய அணியில் இடம் பெறுவோம் என்ற நம்பிக்கையே அற்றுப் போய் விட்ட பல வீரர்களுக்கு புது வாழ்வு கொடுத்தவர் வார்ன்.
கடந்த சீசனில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் வெற்றிக்கு உறுதுணையாக இருந்த யூசுப் பதானுக்கு இந்திய அணியில் விளையாடும் வாய்ப்பு தேடி வந்தது. இப்படி இளம் வீரர்களை கண்டறிந்து அவர்களுக்கு வாய்ப்பு கொடுப்பதில் ராஜஸ்தான் ராயல்ஸ் முதலிடம் பிடித்துள்ளது.
அதே பாணியில் இந்த சீசனிலும் யாருமே அறிந்திதருந்த கம்ரான் கானை தூக்கி விட்டுள்ளார் வார்ன். இதில் விசேஷம் என்னவென்றால் கம்ரான் கான் இதுவரை முதல் தர போட்டி ஒன்றில் கூட விளையாடாதவர்.
கம்ரான் கானின் திறமையை கிரிக்கெட் விமர்சகர்கள் புகழ்ந்து வருகின்றனர். கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான போட்டியில், கம்ரான் பந்து வீசியபோது அதிலிருந்து ரன் ஏதும் வராதா என்று எதிர் அணியினர் டென்ஷன் ஆகும் அளவுக்கு கஞ்சத்தனமாக ரன்களை விட்டுக் கொடுத்து போட்டியை டை செய்தவர் கம்ரான்.
அதையடு்த்து 2 புள்ளிகள் யாருக்கு என்பதை நிர்ணயிக்கும் சூப்பர் ஓவரில், அதிரடி நட்சத்திர பேட்ஸ்மேன் கெய்லை அதிக ரன்கள் அடிக்க விடாமல் செய்து அசத்தினார்.
இதுவரை ஒரு முதல் தரப் போட்டிகளில் கூட விளையாடாத இவர் கங்குலி, மெக்கலம், கெய்ல் போன்ற நட்சத்திர வீரர்களுக்கு எதிராக பந்துவீசி தங்கள் அணியை வெற்றி பெறச் செய்துள்ளார். இதற்கு அவரது மனவலிமை தான் காரணம் என்பதை தவிர வேறு எந்த காரணமும் சொல்ல முடியாது.
விறகு வெட்டியின் மகன்...
தற்போது 18 வயதான இவரது சொந்த வாழ்க்கை மிகவும் சோகத்துக்கு உரியது. எந்த உதவியும் இல்லாமல் கடின உழைப்பு ஒன்றை மட்டுமே நம்பி இருந்த அவருக்கு இன்று வெற்றி தேவதையி்ன் கருணை பார்வை கிடைத்துள்ளது.
கம்ரானின் தந்தை ஒரு விறகு வெட்டி. அவருடன் பிறந்தவர்கள் 6 சகோதரர்கள், 2 சகோதரிகள். அவர்களில் கம்ரான் தான் கடைசி. உத்தர பிரதேசத்தின் ஆலம்கார்க் பகுதியைச் சேர்ந்த இவர் கிரிக்கெட் வெறியில், 13 வயதில் மும்பை நோக்கி ஓடி வந்தார்.
மும்பையில் சாப்பிடவும், தூங்கவும் வழியில்லாமல் ரயில் நிலையத்தில் சுற்றியுள்ளார். ஆனால், தனது லட்சியத்தில் மட்டும் விடாப்பிடியாக உறுதியாக இருந்துள்ளார். அப்போது தான் ஒரு நாள் நவுசத் கான் என்ற கிரிக்கெட் பயிற்சியாளரின் கண்ணில் அவர் சிக்கியுள்ளார்.
கம்ரானின் வெறி மற்றும் அவரது நம்பி்க்கையைப் பார்த்த நவுசத் கான், பட்டை தீட்டப்பட வேண்டிய வைரம் கம்ரான் என்பதை உணர்ந்து அவருக்கு பயிற்சசியளித்தார்.
மும்பை உள்ளூர் போட்டி ஒன்றை காண வந்த ராஜஸ்தான் ராயல்ஸ் பயிற்சியாளர் டேரன் பேரி இவரது பந்துவீச்சில் மயங்கி போய் அணியின் கேப்டன் வார்னிடம் பரிந்துரை செய்துள்ளார்.
கம்ரன் 140 கிமீ., வேகத்தில் பந்துவீச மிரண்டு போன வார்ன் திறமைக்கு வாய்ப்பு கொடுத்துள்ளார். இந்த நம்பிக்கையில் தான் வார்ன் அவருக்கு கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் கடைசி ஓவர் மட்டும் சூப்பர் ஓவர் வீசும் வாய்ப்பு கொடுத்துள்ளார்.
அப்போது வார்ன், கம்ரனிடம் கூறுகையில், சூப்பர் ஓவரை பற்றி கவலைப்படாமல் பந்துவீசு. ஏனென்றால் அணியை தோல்வியில் இருந்து காப்பாற்றி நீ தான் சூப்பர் ஓவருக்கு கொண்டு வந்துள்ளாய். கடைசி ஓவரை நீ சிறப்பாக பந்து வீசவில்லை என்றால் நாம் சூப்பர் ஓவருக்கே வந்திருக்க முடியாது என்றார்.
கைவிட மாட்டேன்...
இது குறித்து கம்ரன் கூறுகையில், வார்ன் என் மீது வைத்துள்ள நம்பிக்கை தான் எனக்கு கிடைத்த அதிர்ஷ்டம். அவர் ஒவ்வொரு முறையும் பந்தை என்னிடம் கொடுக்கும் போதும் அவரது தேவையை பூர்த்தி செய்ய முடியும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. நான் ஒரு போதும் அவரை கைவிட மாட்டேன் என்கிறார் கம்ரான்.
கம்ரானை இந்தியத் தேர்வாளர்களும் கைவிடாமல் தூக்கி விட்டால், இந்திய அணியையும் கம்ரான் கைவிடமாட்டார்.

நன்றி:தட்ஸ்தமிழ்
No comments:
Post a Comment